பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மதுர காளியம்மன் கோவில் குடமுழுக்கு 21 வருடங்களுக்கு பிறகு வருகின்ற (05.04.2023)-ம் தேதி அன்று மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது. மேற்படி குடமுழுக்கு விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். எனவே மக்களின் பயன்பாட்டிற்காகவும், போக்குவரத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினரால் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (05.04.2023-ம்) தேதி காலை 04.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருச்சியில் இருந்து சென்னை மற்றும் வட மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி to சென்னை நெடுஞ்சாலையில் உள்ள காரை பிரிவு ரோட்டில் இருந்து வலது புறமாக திரும்பி அரியலூர் சென்று அங்கிருந்து சென்னை செல்லவும், சென்னையிலிருந்து திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூர் 4 ரோட்டில் இருந்து இடது புறமாக திரும்பி அரியலூர் வழியாக திருச்சி செல்லவும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு திருவிழாவிற்காக திருச்சி மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வருபவர்கள் தங்கள் வாகனங்களை சிறுவாச்சூர் கிராமத்திற்கு முன்பு உள்ள ஆல்மைட்டி மெட்ரிகுலேஷன் பள்ளி அருகில் வாகனங்களை நிறுத்தவும் துறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வரும் வாகனங்கள் புதுவேலூர் சாலையிலுள்ள ரஞ்சனி காமராஜ் திருமண மண்டபம் அருகிலும், சென்னை மற்றும் வட மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வருபவர்கள் ராம் இன் பெட்ரோல் பங்கிற்கு எதிர்புறம் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர்மீடியனில் வலது புறமாக திரும்பி வலது புறமுள்ள கிராமசாலையில் இருந்து விளாமுத்தூர் சாலை மற்றும் நொச்சியம் சாலை ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.