பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் அரசு பணியில் சேர வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் அந்த கனவினை எப்படி நடைமுறை படுத்துவது என்பதில் தான் அவர்களது வெற்றி இருக்கும். பல இளைஞர்களுக்கு அரசு பணிக்கு எப்படி தயாராவது என்ற அடிப்படை வழிக்காட்டுதல் கூட இல்லாத நிலையில் உள்ளார்கள்.
இத்தகைய நிலை பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்களுக்கு வர கூடாது என்ற உயரிய நோக்கத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிக்காட்டுதல் மையம் இணைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்களுக்கு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலைக் காவலர் ( காவல்துறை, தீயணைப்புதுறை மற்றும் சிறைத்துறை) மற்றும் நேரடி உதவி ஆய்வாளர் (சட்டம் & ஒழுங்கு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்படை) ஆகிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகள் வருகின்ற 19.04.2023-ம் தேதி புதன் கிழமை முதல் துறைமங்கலம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிக்காட்டுதல் மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பானது காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை தேர்வில் அனுவமுள்ள சிறந்த பயிற்சியாளர்களால் நடத்தப்படவுள்ளது. இவ்வகுப்பில் காவல்துறை தேர்விற்கு தேவையான அனைத்து பாடமும் சிறந்த முறையில் நடத்தப்படும்.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள், இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி, தங்களது வாழ்நாள் கனவினை நனவாக்கும் வகையில் சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டு, வாழ்வில் மென்மேலும் உயர, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
குறிப்பு கல்வி தகுதி இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு கட்டாயம் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவி ஆய்வாளர் தேர்விற்கு அரசால் அங்கிகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக (10+2+3) என்ற கல்வி முறையினை பின்பற்றியிருக்க வேண்டும். உடற் தகுதிகள்
ஆண்கள் குறைந்தபட்சம் 167 செமீ உயரமும், பெண்கள் குறைந்தபட்சம் 157 செமீ உயரமும் இருக்க வேண்டும் மேலும் விபரங்கள் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் வழிக்காட்டுதல்களை பின்பற்றவும். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட தனிப்பிரிவு தொலைப்பேசி எண் 9498100690 மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம், தொலைப்பேசி எண் 9799055913 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.