கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பெண் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணவேணி. நேற்று இவர் காவல் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது ஒரு ஆசாமி குடிபோதையில் காவல் நிலையத்தில் புகுந்தான். ஒரு பேக்கரி கடையின் பெயரைச்சொல்லி அதை ஏன் இன்னும் மூடவில்லை? அவன் மாமூல் கொடுக்கிறானா? என்று கேட்டு தகராறு செய்தாராம். இதை தட்டிக் கேட்ட ஏட்டு கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் பேசி பணி செய்ய விடாது தடுத்தார். இதுகுறித்து ஏட்டு கிருஷ்ணவேணி செய்த புகாரின் பேரில் போலீசார் அந்த ஆசாமியை கைது செய்தனர். விசாரணையில் அவர் கோவை ரேஸ்கோர்ஸ் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பத்மநாபன் (வயது 55) என்பது தெரியவந்தது. இவர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாது தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்