ஈரோடு: ஈரோடு மாவட்டம்,பவானி அருகே ஜம்பையை சேர்ந்தவர் கருப்பன் 30. ஓட்டுநர். இவரது மனைவி ரேவதி 28.இவர்களுக்கு யஸ்வந்த், ரோகித் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ரேவதி தினமும் அதிக நேரம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகமடைந்த கருப்பன் கடந்த 16-ந் தேதி இரவு இதுகுறித்து கேட்டுள்ளார்.
அப்போது தம்பதியினருக்கு இடையே சண்டை பெரிதாக நடந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பன், ரேவதியின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து,கருப்பனை தேடி வந்தனர். இந்தநிலையில் கருப்பன் தனது மனைவியை கொலை செய்ததாக சரண் அடைந்தார்.