திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மாவட்டம் பழனி அருகே சின்னகளயம்புதுர் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் விக்டோரியா41. இவருக்கு திருமணமாகி அய்யனார் என்ற கணவரும் உள்ளார்.
விக்டோரியா தனது கணவரையும் குழந்தையையும் பிரிந்து பலஆண்டுகளாக தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த சம்பவத்தின்போது தாலுகா காவல் துறையினர் விசாரணை செய்தனர்.
விசாரணையில் விக்டோரியா வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் பாப்பம்பட்டியை சேர்ந்த பத்மநாபன் 31)என்ற இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. பத்மநாபனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது.
இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்தார். போலீசாரின் தொடர் விசாரணையில் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் விக்டோரியாவிற்கும், பாப்பம்பட்டியை சேர்ந்த பத்மநாபனுக்கும் இடையே மடத்துக்குளம் அருகே காகித ஆலையில் வேலைக்கு சென்றபோது பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் விக்டோரியா தூக்கிட்டும், பத்மநாபன் கத்தியால் குத்தப்பட்டும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்டோரியா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? பத்மநாபனை கொலை செய்தவர்களே விக்டோரியாவையும் கொலை செய்தார்களா?என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா