ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள வாணி காந்திநகரை சேர்ந்தவர் பொன்னுத்தாய் 43. அதேபகுதியை சேர்ந்த முனியசாமி 50. என்பவர் கிண்டல் செய்துள்ளார். மனம் உடைந்த அவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி அவதூறாக பேசி கீழே கிடந்த கம்பியை எடுத்து பொன்னுத்தாயை தாக்கியுள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியல் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து முனியசாமியை கைது செய்தனர்.