சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆதனூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த 20.08.2020 அன்று மானாமதுரை சந்தையில் காய்கறி வாங்க பூக்கார தெருவின் வழியாக நடந்து சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து அப்பெண்மணி அளித்த புகாரின் பேரில் மானாமதுரை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட அஸ்லாம் மற்றும் அஜும்கான் ஆகிய 2 நபர்களை 24.08.2020 அன்று u/s.392 IPC -ன் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை