தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கடையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகள் முத்துலட்சுமி 21 என்பவர் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்தில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த கோவில்பட்டி மந்தித்தோப்பு ராஜகோபால் நகரைச் சேர்ந்த கணேசன் மகன் பாரதி என்ற சூர்யா 23 என்பவர் முத்துலட்சுமியின் செல்போனை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அரிகண்ணன் வழக்குப்பதிவு செய்து பாரதி என்ற சூர்யாவை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 1,500/- மதிப்பிலான செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.