பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் (18.03.2023), – ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் மாணவிகளிடம் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். பின்னர் பெண்கள் அனைவரும் அனைத்து துறைகளிலும் அளப்பரிய சாதனைகள் செய்து வருகின்றனர் பெண்கள் பணிபரியாத துறைகளும் இங்கில்லை அவர்கள் செய்யாத சாதனைகளும் எதுவுமில்லை என்றும் அனைத்து பெண்களும் மன தைரியத்துடனும் மன வலிமையுனடனும் தங்களது துறைகளிலோ அல்லது வாழ்க்கையிலோ உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும் கல்லூரி மாணவிகளிடம் காவல்துறையில் பெண்கள் பணியில் சேர அதிகம் முன் வர வேண்டும் எனவும் அதற்கான வழிகாட்டு முயற்சிகளும் எடுக்கபடும் எனவும் கூறினார்கள். இறுதியாக மாணவிகள் மட்டுமல்லாமல் அவர்களின் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இலவச உதவி எண்கள் குறித்து மாணவிகள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறைகள் வழங்கினார்கள்.