நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம்.இகாப அவர்கள் உத்தரவுப்படி தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட காவல்துறை சார்பில் கிராம விழிப்புணர்வு கூட்டம் வாயிலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர் இந்தநிலையில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு மற்றும் காவலன் செயலி பெண்களின் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வந்தது இதனை தொடர்ந்து இன்று அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் உதவி ஆய்வாளர் திருமதி வேம்பு தலைமயில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நாகப்பட்டினம் நகர் பகுதியில் உள்ள முக்கிய வணிக வளாகம் கடை விதிகளுக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் இந்த செயலி குறித்த விழிப்புணர்வு மற்றும் செயலி பதிவிறக்கம் செய்து தரப்பட்டுள்ளது.