திருவண்ணாமலை: பாஜக மாவட்ட துணைத்தலைவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை செங்கம் சாலை 3வது தெருவை சேர்ந்தவர் அருணை ஆனந்தன் (43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் பாஜக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை தலைவராக உள்ளார். இவர் பாஜக கட்சி பிரமுகர் ஒருவருக்கு ரூ.28 லட்சம் வரை பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது ஆனந்தனிடம் பணத்தை திருப்பி கேட்பாயா என்று கூறி அவரை தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் ஆனந்தனின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி,கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர் ண்ணாநகரைச் சேர்ந்த அஜித்குமார்(26), ஆணாய்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (23), தாமரை நகரை சேர்ந்த பாபு என்ற சதீஷ்குமார் உட்பட 4 பேர் மீது போலீசார்கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
.