திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.K.புனிதாஅவர்களின் தலைமையில் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜமுனாமரத்தூர் சிங்கிணறு ஓடைப்பகுதி மற்றும் ஆதமங்கலம் புதூர் ஏரியில் சுமார் 2,400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.




















