தஞ்சை : தஞ்சை நகர துணை சூப்பிரண்டாக திரு. பி.என்.ராஜா, பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு சேலத்தில் பயிற்சி துணை சூப்பிரண்டாக இருந்து வந்தார். தஞ்சையில் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று துணை சூப்பிரண்டு பி.என்.ராஜா தெரிவித்தார். அதேபோல் கோவையை சேர்ந்த திரு.ஜாபர் சித்திக், திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், வல்லம் பயிற்சி துணை சூப்பிரண்டு திவ்யா தஞ்சை மாவட்ட குற்ற பதிவேடு அலுவலக துணை சூப்பிரண்டாகவும், தேனி மாவட்டத்தை சேர்ந்ததிரு. பிரிதிவ்ராஜ் சவுகான், பட்டுக்கோட்டை துணை சூப்பிரண்டாகவும், தென்காசியை சேர்ந்த திருமதி. நித்யா, வல்லம் துணை சூப்பிரண்டாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.