தர்மபுரி: (11.08.2024) காலை 08.00 மணிக்கு திரு. ச. சோ. மகேஸ்வரன் அவர்கள் தர்மபுரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். தர்மபுரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை தொடர்ந்து சீர்படுத்துவதிலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சட்டப்படி விரைவான விசாரணை செய்து தீர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போதைபொருட்களுக்கு எதிராக துரித நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு போதை பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றும், சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் கெட்ட நடவடிக்கையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குற்றங்களை தடுக்கவும், பொதுமக்கள், மாணவ-மாணவியர் மத்தியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தி விபத்துக்களை குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், காவல் துறை மற்றும் பொது மக்கள் நல்லுறவை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் சென்னை பெருநகர காவல் துறையில் சென்னை பாதுகாப்பு காவல் துணை ஆணையராகவும், தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.