கரூர் : கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்ற புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி (36) என்பவரை கைது செய்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.