ஈரோடு: புன்செய் புளியம்பட்டி பகுதியில் கடையை திறந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து புன்செய் புளியம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பவானிசாகர் சாலையில் எஸ்.ஆர்.டி.,நகர் அருகே உள்ள ஒரு மளிகைக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து,அந்த கடையின் உரிமையாளர் தனபால்(43) மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.