ஈரோடு: ஈரோடு,பெருந்துறை,பவானி,கோபி,சத்தியமங்கலம் ஆகிய ஐந்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக 562 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 621 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1.60 கோடி மதிப்பிலான இரண்டுடன் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.