திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள், சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து 25.07.2021 மற்றும் 26.07.2021 தேதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 34 நபர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 7 கிலோ 644 கிலோ கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.