ஈரோடு: பெருந்துறையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை இருவர் மீது வழக்குபதிவு செய்தனர்.
பெருந்துறை தினசரி மார்க்கெட்டில் கடை நடத்திவரும் ஜேசுராஜ் செல்வின்(26) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதே போல் அதேபகுதியில் பெரியசாமி 60 என்பவது கடையில் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து அவர்கள் இருவரும் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.