கரூர் : வந்தவாசியை அடுத்த இந்திரா நகரில் ரமேஷ் 55 என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொன்னுர் காவல் துறையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை அங்கு சென்ற காவல்துறையினர் சோதனை நடத்தியதில் கடையில் ரூபாய் 31 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை பதுக்கி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷை கைது செய்து,புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.