திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமார் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.மஞ்சுநாத் உள்ளிட்ட போலீசார் வந்தவாசி–காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசுக் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் காரில் 4 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 1.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார் சொகுசு காரை பறிமுதல் செய்து,அதில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தூதாராம், பதமராம் மற்றும் சங்கர்லால் ஆகிய 3-பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.