திருநெல்வேலி: திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. லிபி பால்ராஜ் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மகாதேவன்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துவேல் 28, செல்வராஜ 53. ஆகிய இருவரையும் உதவி ஆய்வாளர் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் அவர்களிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 75,000 மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், ஒரு இரு சக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.