இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த (08.02.2023) அன்று செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். அவர் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிக்க வரும் பொது மக்கள் படிப்பதற்காக நூலகத்தை திறக்க அறிவுறுத்தினார். அதன் பேரில் முதற்கட்டமாக (14.03.2023) மாலை இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் நூலகத்தை வேலூர் சரக காவல் துணை தலைவர் M.S முத்துசாமி இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார். மேலும் இதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நூலகம் திறக்கப்பட அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு. விசுவேசுவரய்யா, இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரபு, ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் திரு.விநாயகமூர்த்தி, தனிபிரிவு காவல் ஆய்வாளர் திரு. அருண் ,உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்