திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, வடமதுரை, தாடிக்கொம்பு, திண்டுக்கல் உள்ளிட்ட 13 இடங்களில் வீட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட தேனி மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை போலீஸ் சூப்பிரண்டு திரு.ரவளிபிரியா உத்தரவின் பேரில்;
திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி.திரு.சுகுமாரன், நிலக்கோட்டை டி.எஸ்.பி திரு.முருகன் ஆகியோர் மேற்பார்வையில் தாலுகா ஆய்வாளர் திரு.பாஸ்டின் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் திரு.ஷேக் தாவூத்,திரு.பொன் குணசேகரன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 53 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா