கோவை: கோவை போத்தனூரில் உள்ள ஒரு ரேஷன் கடை முன் அனுமதி பெறாமல் பாஜக சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து ஏட்டு ஸ்ரீராம் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுதொடர்பாகபோலீசார் சுந்தராபுரம் மண்டல பா.ஜ.க தலைவர் சிவானந்தம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பிளக்ஸ் போர்டு பறிமுதல் செய்யப்பட்டது.