திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் போக்சோ சட்டத்தில் ஜோசப் பெனிட்டோ 41 என்பவரை திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இவர் மீது அனைத்து மகளிர் போலீசார் திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புருஷோத்தமன் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.