மதுரை: மதுரை மாவட்டம், பாலமேடு வடக்கு தெரு பொதுமகா சபைக்கு பாத்தியப்பட்ட அய்யனார் சுவாமிக்கு, ஆடி வெள்ளியை முன்னிட்டு கனிமாற்று விழா வில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பழ கூடையினை ஏந்தி, பாலமேடு வடக்கு தெருவில் இருந்து நடை பயணமாக 2 கிலோமீட்டர் சென்று அய்யனார் கோவில் அடைந்து அங்கு சுவாமிக்கு கனிமாற்று விழா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, வடக்கு தெரு பொது மகாசபை கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். பாலமேட்டில், ஆண்டுதோறும் , அய்யனார் சுவாமிக்கு கனி மாற்று திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி மாதங்களில், கிராம தேவதைகளை பொதுமக்கள் சிறப்பாக பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.
அம்மன் கோயில்களில், ஆடி வெள்ளிக்கிழமைகளில் , கூழ் காய்ச்சி அம்மனுக்கு வேப்பிலை வைத்து படைத்து , பக்தர்களுக்கு கூழை பிரசாதமாக கோயில் நிர்வாகத்தினர் வழங்குவர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி