கோவை : கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு. வே பாலகிருஷ்ணன் இ. கா. ப., அவர்கள் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது C2 பந்தய சாலை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனர். பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து காவல் ஆணையர் அவர்கள் பந்தய சாலை காவல் ஆய்வாளருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்