குமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் (DIG) திரு. பிரவேஷ் குமார் IPS.அவர்கள் தலைமையில் பாதுகாப்புபணி முன்னேற்பாடு கூட்டம் இன்று (12.02.22) நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் வாக்குப்பதிவு,
வாக்கு எண்ணிக்கை நாட்களில் பாதுகாப்பு பணி குறித்து விளக்கினார்கள்.
இந்த கூட்டத்தில் சரக துணை தலைவர் அவர்கள் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்கணிப்பாளர்கள் மற்றும் மாவட்டத்தின் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்த அறிவுரைகளை வழங்கினார்.