திருநெல்வேலி: கொரோனா வைரஸ் நோய் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசால் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.
இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில்,
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்காலிக சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஊரடங்கின் போது மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் சுற்றுவதை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு டிரோன் கேமரா வழங்கினார். இதன் அடிப்படையில் இன்று திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி அர்ச்சனா அவர்கள் தாழையூத்து பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். இதன்மூலம் பொதுமக்கள் அதிகமாக நடமாடக் கூடிய பஜார்,ஆற்றுப் பகுதிகள்,மற்றும் விளையாட்டு மைதானங்களிலிலும் பொதுமக்களின் நடமாட்டம் குறித்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.