திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பழநி தேவஸ்தான ஊழியர் பலியானார். ஒருவர் காயமடைந்தார். திண்டுக்கல் காந்தி கிராமத்தை சேர்ந்த திருப்பதி, 49. இவர் பழனி தேவஸ்தானத்தில் அக்ரி பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி செந்தில் ராணி சின்னளபட்டி தேவாங்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் இன்று காலை 8மணிக்கு காந்தி கிராமத்தில் இருந்து பழனிக்கு இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்றார்
. ரெட்டியார் சத்திரம் அருகே இவர் இருசக்கர மோட்டார் வாகனத்தில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் இவர் பலியானார்.
மேலும் ஐஸ் வியாபாரி ஒருவர் காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ரெட்டியார் சத்திரம் போலீசார் விசாரணை செய்கிறார்கள்.