மதுரை : மதுரை பழங்காநத்தத்தில், நடந்த விபத்தில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டதில் பைக்கில் சென்ற வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். திருமங்கலத்தைச் சேர்ந்தவர் அருள் பிரகாஷ், இவர் மதுரை நோக்கி பைக் ஓட்டி சென்று கொண்டிருந்தார். திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பைக்குடன் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. இதைத் தொடர்ந்து, ஆட்டோவிற்கு பின்னால் வந்த வேன் ஒன்றும் மோதி விபத்தானது. இந்த விபத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் அருள் பிரகாசின் தலையில் வேன் ஏறி இறங்கியது. இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே வாலிபர் அருள் பிரகாஷ் பலியானார். இந்த சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி