திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(31).இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் 2018 ஆம் ஆண்டு ஆசிரியராக பணிபுரிந்தார். அப்போது அந்த பள்ளியில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதை அறிந்த பள்ளி நிர்வாகம் அவரை பணியிலிருந்து நீக்கியது. இந்த நிலையில் அவர் அந்த மாணவியை கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல் ஆய்வாளர் திரு.அன்பரசி வழக்கு பதிந்து வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.