கோவை : கோவை (12/6/2023) மற்றும் (14/ 6/ 2023), -ம் தேதிகளில் பள்ளிகள் துவங்க உள்ளதை முன்னிட்டு பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களை ஒழுங்கு படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்குவது தொடர்பாக கடந்த (08/06/2023 ), ஆம் தேதி அன்று கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து பள்ளி நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. மேற்படி கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு வாயில்கள் இருக்க வேண்டும் குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்கள் ஒரு வாயில் வழியாக உள்ளே சென்று பள்ளி வளாகத்திற்குள் மட்டுமே குழந்தைகளை இறக்கிவிட்டு மற்றொரு வாயில் வழியாக வெளியே வரவேண்டும் எனவும் மேலும் பள்ளியின் நுழைவாயிலில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிப்பு செய்து பள்ளிக்கு வரும் வாகனங்களை ஒழுங்கு படுத்த வேண்டும் எனவும் பள்ளியில் மேற்கூறிய நடைமுறைகள் செயல்படுத்துவதை கண்காணிக்க தினமும் பொறுப்பான நபர்களை நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் (12/6/2023), ஆம் தேதி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற பெரும்பாலான வாகனங்கள் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாமல் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி குழந்தைகள் இறங்கி வலிக்கு செல்வது காண முடிந்தது மேலும் ஒளி பெருக்கிகள் நுழைவாயிலின் அருகில் நிறுவப்படவில்லை பள்ளிக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கென பள்ளிகளின் சார்பில் யாரையும் நியமிக்கப்படவில்லை இந்நிலையானது அறிவுரைகளின் நடைமுறைப்படுத்துவதற்கு பெரும்பாலான பள்ளிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதை காட்டுகிறது. எனவே பள்ளி நிர்வாகத்தினர் இனிவரும் காலங்களில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களை ஒழுங்கு படுத்துவதற்கான தினந்தோறும் தனிக் குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் பள்ளியில் இரண்டு வாழ்களை பயன்படுத்தி பள்ளிக்கு வரும் குழந்தைகள் அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் மட்டுமே இறங்குவது ஏறுவது என குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும். பள்ளிக்கு வரும் வாகனங்களினால் பொது போக்குவரத்திற்கு எவ்விதமான இடையூறும் ஏற்படாமல் செயல்பட வேண்டும் மேலும் பள்ளிகளின் நுழைவாயிலில் ஒலிபெருக்கிகளை நிறுவி இது குறித்து தொடர் அறிவிப்புகளை செய்ய வேண்டும் அனைத்து பள்ளிகளிலும் மேற்குறிபிட்ட அறிவுரைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்