பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின், உத்தரவின்படி இன்று (26.10.2023) மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.C.வேலுமணி அவர்கள், மற்றும் அவரது குழுவினர் பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மாணவர்களிடம் போதைப்பொருள் உபயோகிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை உபயோகிப்பவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் எவ்வாறு பாதிக்கப்டுகின்றனர் என்றும் எடுத்துரைத்தார்கள்.
போதைப்பொருட்களுக்கு அடிமையாதல் மற்றும் மதுவிற்கு அடிமையாதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் வாழ்வியலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.மேலும் மாணவர்களிடம் கலந்துரையாடல் நிகழ்த்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள், கல்வியே ஒருவரின் முன்னேற்றத்திற்காக சிறந்த பாதை என்றும் அவற்றை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனறும் பள்ளியில் இடைநின்ற மாணவர்களின் பெற்றோர்கள் மீண்டும் அம்மாணவர்களை பள்ளியில் சேர்த்து அவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.மேலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பகுதியில் சட்டவிரோதமாக கள்ளசாராயம் காய்ச்சுதல், விற்றல் மற்றும் ஊறல் போடுதல் போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால் காவல்துறையிடம் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் இரகசியம் காக்கப்படும் என்றும் கூறினார்கள்.