மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 17 நாட்கள் நடைபெறும் திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது இதனைத் தொடர்ந்து தினசரி மாரியம்மன் சோழவந்தானின் நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் அப்போது கோவில் மண்டபத்தில் பத்தி பாடல்கள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும் நேற்று இரவு பள்ளி குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது இதில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் காப்பு கட்டி முடித்தவுடன் கோவில் மண்டபத்தில் தங்கி பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி