திண்டுக்கல்: திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள நூற்றாண்டு பள்ளியில் கடந்த 8-ம் தேதி கம்ப்யூட்டர், யுபிஎஸ், கேரம்போர்டு புத்தகங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் திண்டுக்கல் நகர் மேற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரவளி பிரியா உத்தரவின்பேரில், டவுன் டி.எஸ்.பி திரு.மணிமாறன் மேற்பார்வையில் ஆய்வாளர் திரு.உலகநாதன் தலைமையில் நகர் குற்றத்தடுப்பு காவல்துறையினர் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.நல்லதம்பி, திரு. வீரபாண்டி மற்றும் காவலர்கள் திரு. ஜார்ஜ், திரு.ராதாகிருஷ்ணன், திரு.முகமது அலி, திரு. விசுவாசம் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்த சந்தோஷ்(19), சிவசங்கரன்(20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கம்ப்யூட்டர், கேரம்போர்டு, புத்தகங்கள், யுபிஎஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா