திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்புக்கு தேவையான ப்ரொஜெக்டர், ஆடியோ மைக் செட், பாடப்பிரிவு நேர மணி இயந்திரம்,இரண்டு பீரோக்கள் உள்ளிட்ட உபகரணங்களை சென்னை லயன்ஸ் கிளப் கோல்டன் சன் அமைப்பு பள்ளிக்கு வழங்கியது. லயன்ஸ் கிளப் சென்னை கோல்டன் சன் தலைவர் லயன் எம்.கெ.எஸ்.இளங்கோவன், செயலாளர் லயன் விஜய், பொருளாளர்கள் லயன் வினோத், லயன் ஜெயக்குமார், நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய இ.ஜனார்தனம் ஆகியோர் இதனை வழங்க
பள்ளி தலைமை ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி பெற்றுக் கொண்டார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட வகுப்பு ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு