தேனி : தேனி மாவட்டம் இராஜதானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013 -ஆம் ஆண்டு மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் செந்தில் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு விசாரணையில் இருந்து வந்த நிலையில் இவ்வழக்கு 31.07.2020-ம் தேதியன்று தேனி மாவட்டம், மகிளா விரைவு நீதிமன்றத்தில் இறுதி விசாரணையின் முடிவில் நீதிபதி திருமதி.கீதா.ML., அவர்கள் ராஜதானி போலீசாரால் அளிக்கப்பட்ட தக்க சாட்சியங்களின் அடிப்படையில் செந்தில் என்பவர் குற்றவாளி என சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்து அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.