நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க கோடியக்கரைவனச்சரக அலுவலர் தி|ரு.அயூப்கான் தலைமையில் வனவர்கள் தி|ரு.ராமதாஸ், வனக்காப்பாளர்கள் தி|ரு.ரணீஷ்குமார். வேட்டை தடுப்பு காவர்கள் தி|ரு.நிர்மல்ராஜ். தி|ரு.பாண்டியன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர்கள் நேற்று தலைகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வயல்வெளியில் வலைவைத்து மடையான் பறவைகளை வேட்டையாடிய திருத்துறைபூண்டியை சேர்ந்த வீரகுமார் 21. விஸ்வநாதன் 26. ஆகிய 2 பேரை பிடித்து வழக்குப்பதிவு செய்து 2 பேருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்தனர்.