மதுரை: நாகமலை புதுக்கோட்டை மேல தெருவை சேர்ந்தவர் நாகூர் பாண்டி (48). இவர் பெருங்குடி மண்டேலா நகர் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்தார். அவர் கையில் பேக் ஒன்றை வைத்திருந்தார். அந்தபேக்கில் செல்போன் ஒன்றும், பணம் ரூபாய் ஐநூறும் வைத்திருந்தார். அவரிடம் இருந்த பேக்கை 3 வாலிபர்கள் நைசாக திருட முயன்றனர். இதனால் அவர் கூச்சல்போட்டார். அப்போது அவர்கள் மூவரும் ஓடத்தொடங்கினர். அவரை விரட்டி பொதுமக்கள் பிடித்தனர். பிடிபட்ட நபர்களை அவனியாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கண்டாராயணன் பட்டியை சேர்ந்த கணேசன் மகன் ராஜேந்திரன் (36) அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்வாளன் மகன் ரவிச்சந்திரன் (28), குணசேகரன் மகன் ஹரிகிருஷ்ணன் (32) என்று தெரியவந்தது அவர்கள், மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி