தேனி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் தேனி மாவட்டத்தில் தேர்வான 15 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் பணி நியமன ஆணையை வழங்கி மேலும் பணி சிறக்க தனது வாழத்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.கார்த்திக் (CYBER CRIME) அவர்கள் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.