திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உட்கோட்டம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த முதல்நிலைக் காவலர் 260 திருஜெயசீலன் என்பவர் கடந்த 9.1. 2021 ஆம் தேதி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இவரது குடும்பத்திற்கு உடன் பணிபுரிந்த 1997 ஆம் ஆண்டு II nd batch பணியில் சேர்ந்த காக்கும் காவல் உதவி கரங்கள் சார்பாக வழங்கப்பட்ட உதவித்தொகை 14 லட்சத்தில் முதல் மகன் சாந்தசீலன் 2 லட்சம் காசோலையாகவும் ,இரண்டாவது மகன் உதய சசீலன் அவர்களுக்கு 5 லட்சம் காசோலையாகவும் அவருடைய மனைவி திருமதி கிளாரா என்பவருக்கு 7 லட்சம் காசோலை யை திருமதி விஜய குமாரி IPS காவல்துறை துணை தலைவர், திண்டுக்கல் சரகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ரவளி பிரியா IPS அவர்களால் இன்று வழங்கப்பட்டது