சேலம்: சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை கள்ளச்சாராயம் காய்ச்சுவது பணம் வைத்து சூதாடிய உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்துக் கைது செய்கின்ற வகையில் சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீ நவ் உத்தரவின் பேரில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்து தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கண்காணித்து குற்றச் சம்பவங்கள் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வாழகுட்டைபட்டி ஏரியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த பத்து பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 10 செல்போன், 20 இருசக்கர வாகனம், மற்றும் ரூ 2 லட்சத்து.80 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து எடப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். எடப்பாடி காவல் உதவி ஆய்வாளர் திரு. பெரியதம்பி அவர்கள் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.