குமரி: கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி சாலத்திவிளை பகுதியை சேர்ந்த பீருக்கண் (எ) பீர் முகம்மது என்பவரின் மகன் மைத்தீன்கான் (67) என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 90,000/- ரூபாய் பணமோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆவார்.
நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மைதீன்கான் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு.இரா.ஸ்டாலின் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
உத்தரவின்படி மாவட்ட குற்றபிரிவு, உதவி ஆய்வாளர் திருமதி. பொன்கீதா தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த மைதீன்கான் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.