திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 3 மற்றும் 5 வது வார்டு ஜெகஜீவன்ராம் தெருவில் 30 மேற்பட்ட குடும்பங்கள் 50 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் பட்டா வழங்கக்கோரி வருவாய்த்துறை அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்து வருவாய் துறை அதிகாரியிடம் ஆலோசனை நடத்தினார். அருகில் திமுக நிர்வாகிகள் மீ.வி. கோதண்டன் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் கா.சு.ஜெகதீசன் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு.தமிழ் உதயன் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஐந்தாவது வார்டு கவுன்சிலர் ஜெயலட்சுமி தன்ராஜ் ,மீஞ்சூர் கதிர்வேலு, கருணாகரன், முப்புராஜ்,விமல் ராஜ் வினோத்குமார் ஒப்பந்ததாரர் ஸ்ரீராம் மீஞ்சூர் காங்கிரஸ் கிழக்கு வட்டார தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன், மீஞ்சூர் வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம் மீஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் திமுக நிர்வாகிகள் அப்பகுதி பொதுமக்கள் மகளிர்கள் என பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு