திண்டுக்கல்: பழனியில் தமிழ்நாடு 14வது பட்டாலியன் சிறப்பு காவல்படை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 14ம் அணி தளவாய் அய்யாச்சாமி, பழனி டிஎஸ்பி
சிவா, நகர காவல் ஆய்வாளர் பாலகுரு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அப்போது முக கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் சமூக இடைவெளியை
கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாமல் ஊர் சுற்றக் கூடாது. வீடுகளிலேயே இருக்கவேண்டும் என பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன.