இராணிப்பேட்டை : (03-11-2023) இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையிடத்தில் தற்காலிக பட்டாசு கடை முதல் விற்பனையை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி, இ.கா. ப., அவர்கள், துவங்கிவைத்தார். உடன் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. பிரபு ( இராணிப்பேட்டை உட்கோட்டம்), திரு. சுரேஷ் ( ஆயுதப்படை), காவல் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை ஆளிநர்கள் உடன் இருந்தனர்.
மேலும் இந்த விற்பனையில் பட்டாசுகள் காவலர்களின் குடும்பங்களுக்கு மானிய விலையிலும் மற்ற பொதுமக்களுக்கு குறிப்பிட்ட சலுகை விலையிலும் இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையிடத்தில் விற்பனை செய்யப்படுகின்றது, என்பதனை தெரிவிக்கப்படுகிறது .
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்