இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக காவல்துறையினரால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவல்துறையினர் இன்று கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி ஆகிய இடங்களிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.