நெல்லை: சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்ற 38 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 654 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.



















